KUTTIMAA SHORT FLIM REVIEW
e most beautiful short, the best crew
மிக அழகான குறும்படம் , மிகச் சிறந்த படக்குழு
லொள்ளு செய்யும் பாட்டிக்கும் பேரனுக்கும் இடையே உள்ள உறவு தான் ' குட்டீம்மா ' திரைப்படம். கிளைமாக்ஸ் இப்படி தான் இருக்கும் என யூகித்து விடலாம் ஆனால் அது அல்ல இப்படம் . இப்படத்தை அமைத்ததே காட்சிகள் அமைக்கப்பட்ட விதமும், கதாபத்திரங்களின் வெளிப்பாடும் தான். சூப்பர் சீன் பிரேமிங் ஒவ்வொரு காட்சியும் அவ்ளோ முழுமையாக , வலுவூட்டும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கு. இப்படத்தின் ஒளிபதிவு கண்டிப்பாக ஒரு திரைபடத்தை பார்ப்பதை போன்ற தாக்கத்தை கொடுத்தது. ஒவ்வொரு காட்சியும் ரசனையுடன் படமாக்கப்பட்டது. வைர பாரதியன் பாடல் வரிகளும் , ஷ்ரவனின் இசையும் காட்சிகளுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது. தரமான எடிட்டிங் மற்றும் சவுண்ட் மிக்சிங். படத்தில் பேரனாக வரும் எஸ்.கே.துரைராஜ் அத்தனை யதார்த்தமாய் , அத்தனை அழகாய் ஒரு நேர்த்தியான நடிப்பை தந்துள்ளார்.நீங்கலாம் கண்டிப்பா ஒரு பெரிய நடிகரா வருவீங்க. படத்தோட மேஜர் ' ஹை லைட் ' டேய் ஒழுகு மூக்கானு சொல்லிக்கிட்டு வரும் பாட்டி தான். . இந்த பாட்டி எக்ஸ்பிரஸன்ஸ்
முன்னாடி நம்ம தமன்னா, அனுஷ்கா லாம் தோத்துடுவாங்க .சூப்பர் பாட்டி பிச்சிடீங்க.
படம் முழுக்க அத்தனை வல்லுனர்கள் இணைந்த ஒரு கூட்டணி போல் தோன்றுகிறது . கண்டிப்பாக தரமான ஒரு படம். படத்தின் குழுவினருக்கும் , முக்கியமான இப்படத்தின் இயக்குனர் ' கணேஷ் குமார்' அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் . கண்டிப்பாக இந்த படம் பல விழாக்களுக்கு சென்று பல விருதுகளை அள்ளும். இத்தனை ஜூனியர் ஆர்டிஸ்ட் படத்திலே நடிச்சிருக்காங்க, லோகேஷன்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்ட விதங்களை பார்க்கும் போது கண்டிப்பாக நிறைய செலவாகிருக்கும் . இந்த மாதிரி தரமான கதைகளுக்கு வர்த்தகம் செய்து ஆதரித்த இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு சிறப்பு பாராட்டுக்கள். இந்த படத்தின் குழுவினர் கண்டிப்பாக நம் வெள்ளித்திரைக்கும் வந்து பாதை மாற்றி அமைத்தவர்களில் முக்கிய இடம் பெறுவர்.
படம் முடிந்த பின் அனைவரும் இருக்கையிலிருந்து எழுந்து கொடுத்த கரகோஷம் இந்த படத்தின் குழுவினர் பெரவேண்டியதே. உண்மையான டீம் வர்க்..மனமார்ந்த வாழ்த்தக்கள் ' குட்டீம்மா ' குழுவினர்களுக்கு.
No comments:
Post a Comment